விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சித்ரா, மற்றும் காவலர்கள் தலைமையில் மதுவேட்டை தொடர்பான சோதனையில் இருந்த போது ஒட்டம்பட்டு ஏரி அருகே சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டதில் சுந்தரமூர்த்தி, தெற்கு தெரு, ஒட்டம்பட்டு என்பவர், ஒட்டம்பட்டு பெரிய ஏரியின் அருகே சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்து சம்பவ இடத்தில் இருந்த 20 லிட்டர் சாராயம் மற்றும் இரண்டு பேரல்களை அடைத்து வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் சாராய ஊரல்கள் கொட்டி அழிக்கப்பட்டு, குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.