விழுப்புரம்: (19.11.2025) ஆம் தேதி அன்று மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கார்த்திகை மாத ஊஞ்சல் உற்சவத்தின் போது பல்லாயிரம் கணக்கிலான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10 ஆம் அணியை சேர்ந்த காவலர் திரு சதீஷ் மற்றும் திரு தர்மதுரை ஆகியோர் கையில் கிடைத்த 8 சவரன் தங்க நகை மேல்மலையனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.வினதா அவர்களிடம் நேர்மையுடன் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து நகையின் உரிமையாளர் அதன் அடையாளங்களை தெரிவித்து வாங்கி செல்லுமாறு கொடுத்த பத்திரிகை செய்தியின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கிரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவரை மனைவி ஷகிலா 50 என்பவர் தனது வீட்டில் நகையை வைத்து விட்டு வந்தால் பாதுகாப்பு இல்லை என்று கருதி தனது கைப்பையில் எடுத்து வந்து தவறவிட்டதாகவும் அதன் அடையாளங்களை சரியாக கூறியதின் பேரில் எட்டு சவரன் தங்க நகைகளை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் மூலம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் நகையின் உரிமையாளர் நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் இருந்த நிலையில் பெரும் மகிழ்ச்சியுடன் நகையினை பெற்றுக்கொண்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கும் மேல்மலையனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கும் மிக்க நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்துக் கொண்டனர். மேலும் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கு சிறப்பான ஏற்பாடு செய்து கோயில் உள் சென்று, வெளியே வருவதற்கு இரு வழிகள் ஏற்படுத்தி சிறப்பாக ஏற்பாடு செய்து, கடந்த மாதங்களில் நான்கு மணி நேரமாக சாமி தரிசனம் செய்த மக்கள் இந்த மாதம் ஒரு மணி நேரத்திற்கு குறைவாக சாமி தரிசனம் செய்து வீடு திரும்பியது பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி கொண்டனர்.
















