சென்னை: சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த நிஜாம் 34. என்பவர் தனது வீட்டின் தரை தளத்தில் ஏசி சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
வீட்டின் 2வது மாடியில் குடோனில் பழைய ஏசி இயந்திரங்களை வைத்துள்ளார். நிஜாம் 03.11.2021 அன்று மதியம் ஏசி சர்வீஸ் சென்டர் மற்றும் குடோனை பூட்டாமல், ஏ.சி சர்வீஸ் செய்வதற்காக பக்கத்து தெருவில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது,
குடோனில் இருந்த 4 ஏ.சி இயந்திரங்களை (Indoor Units) யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. மேற்படி சம்பவம் குறித்து நிஜாம் N-3 முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட இந்திரசெல்வம் (எ) செல்வம் 48. இராயபுரம் என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 4 ஏ.சி இயந்திரங்கள் (indoor Units) கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.