தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிக்காமல் இருப்பதற்காக நேற்று இரவு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.தேவையில்லாமல் சுற்றித்திரிவது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்;- மூன்று சுற்றுகளாக போலீசார் பணிபுரிகின்றனர்.இரவு மாவட்டம் முழுவதும் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் எல்லைப் பகுதியில் ஒவ்வொரு வாகனங்களையும் சோதனை செய்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தேவையில்லாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.