தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமயிடம்) திரு.N.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் (18.12.2024) வாகன ஏலம் நடைபெற்றது. ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 74 இருசக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 79 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. 79 வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில் கிடைத்த தொகை 12,25,146 /-ரூபாய் பணத்தை வங்கியின் மூலம் அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மது விலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள், திருமதி.நர்மதா (உதவி ஆணையர்) ஆயத்த தீர்வை தர்மபுரி மாவட்டம், திரு.ராஜவேல் (உதவி பொறியாளர்) அரசு தானியங்கி பணிமனை தர்மபுரி மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர்கள் திருமதி.கலையரசி, திருமதி.வசந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.