ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் தலைமையில் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் கஞ்சா சோதனை குறித்து ஆய்வு நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பணிக்கம்பாளையம் கிராமத்தில் அதிகமாக வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் தலைமையில் மதுவிலக்கு அமலாக்குத்துறையின் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.
மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இடங்களில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா என்பது பற்றி தீவிர சோதனை மேற்கொண்டனர். மேற்கண்ட சோதனையில் பணிக்கம்பாளையம் VPR பாரத் கேஸ் குடோன் அருகில் மர்ம நபரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஈரோடு மதுவிலக்கு பிரிவு குற்ற எண் 128/2025 ச/பி 8 (C) r/w 20 (b)(ii),(B) NDPS Act வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், தகவல் கொடுபவர்களின் இரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜெ. கோபாலகிருஷ்ணன்