தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள், அலுவலர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி மென்மேலும் சிறப்பாக பணிபுரிய அறிவுரை வழங்கினார்.