திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரதிருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அலுவலகங்களில் எவ்வாறு கோப்புகளை பராமரிக்க வேண்டும், சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
















