திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், அவர்கள் (30.12.2024) முத்துப்பேட்டை உட்கோட்டம், திருக்களார் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.