தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சென்னை காவல் உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த நேரடி உதவி ஆய்வாளர்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்முறை பயிற்சி பெறுவதற்கு அறிக்கை செய்த 18 பயிற்சி எஸ்.ஐக்களை பல்வேறு காவல் நிலையங்களில் நியமனம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், 2021ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 927 பேர் சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழக காவல்துறை உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்தனர். அதனை தொடர்ந்து மேற்படி பயிற்சி முடித்தவர்களில் 18 பேர் செயல்முறை பயிற்சி பெறுவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை செய்தனர்.
மேற்படி செயல்முறை பயிற்சி பெறவுள்ள 18 பயிற்சி உதவி ஆய்வாளர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் நியமனம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பயிற்சி பெற உள்ள பயிற்சி எஸ்.ஐக்களை காவல் நிலையத்தில் உள்ள காவலர் பதவி முதல் எஸ்.ஐ பதவி வரை உள்ள அனைத்து பணிகளையும் சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை அடியோடு ஒழிக்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.