திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (13.10.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.