மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிபட்டி ஊராட்சி மன்றத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் மீனாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செல்வம் வரவேற்று தீர்மான அறிக்கை வாசித்தார்.
இந்த கூட்டத்தில், யூனியன் பற்றாளர் முத்தையா எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம் உறுதி மொழி கிராமம் உறுதி மொழி வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:– நான், எப்போதும் மலம் கழிக்க கழிப்பறையை பயன் படுத்துவேன். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலரிடம் வழங்குவேன். என் குப்பை என் பெறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். எனது வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கவிடாமல் பாதுகாப்பாக அகற்றுவேன். எப்போதும், எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பேன். கடைகளுக்கு வெளியே செல்லும் போது துணிப்பையை உடன் எடுத்து செல்வேன். நமது கிராமத்தை எழில்மிகு கிராமமாக மாற்றும் முயற்ச்சியில் நான் பாங்கேற்பதுடன், என் குடும்பத்தினரையும் பங்கேற்க வைப்பேன் என உளமாற உறுதிகூறுகிறேன். இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டயானா,கிராம நிர்வாக அலுவலர்கள் கீதா, பாண்டியம் மாள், உமாதேவி, தலைமை ஆசிரியர்கணேசன், கிராம செவிலியர் சித்ரா, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி உறுப்பினர் அழகர் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி