தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் அடையல் பகுதியில், அடையல் ராஜரத்தினம் அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு (24.09.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைய எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகள், தையல் மிஷின்கள், மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள், புத்தகப்பைகள் மற்றும் மடிக்கணினி, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது அடையல் ராஜரத்தினம் அவர்களின் 72 பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியானது. இதுபோன்ற சேவைகள் தொடர வேண்டும், பணம், பதவி வரும், போகும் ஆனால் இதுபோன்ற சேவைகள்தான் நிரந்தரமானது. நான் இந்த பகுதிக்கு வந்தது இதுவே முதல் முறை, அதுவும் ஒரு நல்ல காரியத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன். இதுபோன்ற சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
என்று இந்த விழாவை ஏற்பாடு செய்த அடையல் ராஜரத்தினம் அவர்களின் மகன் திரு. அருள்முருகன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அடையல் ராஜரத்தினம் அவர்களின் மகன் திரு. அருள்முருகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவில் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருள், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பவுலோஸ் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.