திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, (19.03.2026) திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி நேரில் ஆய்வு செய்தார். நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சூர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் மாநில எல்லை சோதனைச் சாவடியான கொத்தூர் சோதனைச் சாவடியையும் அவர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பீடு செய்தார்.
மேலும், நாட்றம்பள்ளி பகுதி கூட்டுவழிச் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பணியில் இருந்த காவல்துறையினருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
















