செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் எரிவாயு உருளை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பட்டிணம் மாதவன் கேஸ் ஏஜென்சி சார்பில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் அ.இரஹமத்துல்லா முன்னிலையில் பொது மக்களுக்கு எரிவாயு தொடர்பான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுப்பட்டினம் சமுதாய நல கட்டிடத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் எரிவாயு உருளையே எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது, எரிவாயு விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது, எரிவாயு நுகர்வோர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி காயத்ரி தனபால், நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்