திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தாலுக்கா கலஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் (30), துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் வயது (32), விழுப்புரம் மாவட்டம், கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (42) என்பவர்கள் எரிசாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களை வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் , மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர், மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்கண்ட நபர்கள் தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் இருப்பதை தடுக்க குண்டர் சட்டத்தில் அடைக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 126 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்ற செயல்களுக்கு எதிராக திருவண்ணாமலை காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்