திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஆரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நாடக கலைஞர்கள் தத்ரூபராக எமன் தர்மராஜா வேடமணிந்து மேளதாள முழங்க பொதுமக்களுக்கு விழிபுணர்வு ஏற்படுத்தினார்கள். ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் அவர்கள் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகள் இல்லாமல் வாகனங்களை இயக்குவது தொடர்பாகவும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிவது பற்றியும், மேலும் இரண்டு பேருக்கு அதிகமான நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும், நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிவது அவசியம் குறித்தும், சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றியும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குதல், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குதல் பற்றியும், கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பொது இடங்களில் பாதுகாப்புடன் இருப்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விதமாக நாடக தெரு கூத்து கலைஞர்கள் எமன் தர்மராஜா வேடமணிந்து சாலை விபத்து குறித்து தத்ரூபமாக நடித்து காட்டினார்கள்.
பின்னர் மேளதாள முழங்க பெண்கள் நடனமாடி சாலை பாதுகாப்பு குறித்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்டவகளை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடித்து காட்டினார்கள். மேலும் போலீசார் தரப்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கினார்கள். இதில் நாடக கலைஞர்கள் பொதுமக்கள் காவல்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்