பெரம்பலூர் : கொரோனா தொற்று காரணமாக மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்களுக்கு வாகன தணிக்கை குறித்தும், கொரோனா பாதுகாப்பு குறித்தும் அறிவுரை வழங்கியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை