கடலூர் : கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 15 என்எல்சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் என்எல்சி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது அங்கு வந்த மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த மணி என்ற கஞ்சா மணி என்பவர் சுரங்கப்பாதையில். அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக் கொண்டு வெளியே வர முயற்சித்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு வீரர் செல்வகுமார், பிடிக்க முயற்சித்த போது அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரன் மீது குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமார் மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் திருமதி.மீனாள் தலைமையிலான காவல்துறையினர் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர். தப்பியோடிய மீது மந்தாரக்குப்பம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்களில் வெளியே வந்த அவர் தற்போது ஜாமீனில் வந்து திருட்டு சம்பவங்களில் என்எல்சி மத்திய பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் பாதுகாப்பு படை வீரனை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக, ஓம்சக்தி நகரை சேர்ந்த சபரி வாசன், சாருக்கான் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.