திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்திற்கு புருலிய – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் இரயில் காலை வந்தது. அப்போது திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில்,சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பைகளை சோதனை செய்தனர்.அதில் 9 கிலோ கஞ்சா, 7.1/2 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா