தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக ஊர் காவல் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா வெண்ணாம்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. பயிற்சி முடித்த 30 ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் ஏற்றுக் கொண்டார். இதில் ஊர் காவல் படை வீரர்களுக்கு 45 நாள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது .இந்த பயிற்சியில் 30 ஊர்க்காவல் படை வீரர்கள் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த அணிவகுப்பு மரியாதையில் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் திரு. ஏ.ஜி தண்டபாணி அவர்கள் ஆயுதப்படை காவல்துறை கண்காணிப்பாளர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு ராஜ்குமார் காவல் உதவி ஆய்வாளர் திரு பாருக் ஆகியோர் கலந்து கொண்டனர்.