இராணிப்பேட்டை: இராணிப்பேட்டைமாவட்ட காவல் அலுவலகத்தில், கடந்த (22.08.2025) முதல் (24.08.2025) வரை தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வேலூர் சரகத்தின் சார்பாக 8 நபர்கள் கலந்து கொண்டு, மீட்புப் பணி பிரிவில் முதலிடம் பெற்று கோப்பையும் நினைவுப் பரிசுகளையும் பெற்ற இராணிப்பேட்டை மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.