சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல் படை உறுப்பினர் நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 திருநங்கையர்களுக்கு நேரில் நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வு, சமூக சமத்துவம் மற்றும் திருநங்கையர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
தமிழ்நாடு அரசின் இந்த முன்முயற்சி, திருநங்கையர்களை காவல்துறையின் ஒரு அங்கமாக இணைத்து, அவர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் பொது சேவைகளில் பங்களிக்க வழிவகுக்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து

திரு.முகமது மூசா
















