கோவை : கோவை மாவட்ட ஊர்க்காவல் படை அமைப்பில் 80 ஆண்கள் மற்றும் 06 பெண்கள் என மொத்தம் 86 ஊர்க்காவல் படை ஆளிநர்கள் காலிபணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஊர்க்காவல் படையில் சேரவிரும்புகிறவர்களிடமிருந்து உரிய
படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் தங்களது எல்லைக்குட்பட்ட காவல்
நிலையங்கள் மற்றும் ஊர்க்காவல் படை அலுவலகம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பொள்ளாச்சியிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அதற்கான பெட்டியிலோ (10.07.2023)-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சேர்க்குமாறு கோரப்பட்டது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க (31.07.2023)-ம் தேதி மாலை 5.00 மணி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து (31.07.2023)-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் தங்களது எல்லைக்குட்பட்ட காவல்
நிலையத்திலோ அல்லது கோவை மாவட்ட காவல் அலுவலகத்திலோ சேர்க்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன்., இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்