திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் திருவாரூர் ஊர்க்காவல் படை காவலர்களின் கவாத்து பயிற்சியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டார்கள்.
அப்போது, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அனைவரும் கூடுதல் கவனத்துடன் பணிபுரிய வேண்டும் என்றும், அவர், அவருக்கு வழங்கப்பட்ட பணியை எவ்வித தொய்வுமின்றி சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள். அப்போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் அவர்கள் உடனிருந்தார்கள்.