தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்த இம்முகாமில் விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.விஜய முருகன், இருதய நல மருத்துவர் திரு.சண்முகம், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் திரு.தினேஷ் சுந்தரராஜன், மகளிர் (ம) மகப்பேறு மருத்துவர் திருமதி.வினிதா வைரம் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு ECG , கண் மற்றும் ரத்தப்பரிசோதனை செய்தனர். மேற்படி மருத்துவ முகாமில் சுமார் 220 ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமை ஊர் காவல்படை வட்டார தளபதி திரு.JA.தண்டபாணி , ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மற்றும் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் திரு.சுகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.