திருவாரூர் : திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (09.10.2025) தஞ்சை சரக (திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்) ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.