சேலம் : சேலம் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்வது பற்றி கடந்த (3/11/2022)-ம் தேதி பத்திரிகை செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. அதன்படி இன்று சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திரு.கென்னடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் சேலம் மாவட்டம், திரு.கே.தனசேகரன் ஊர் காவல் படை மண்டல தளபதி ஊர்க்காவல் படை மண்டல துணை தளபதி, சேலம் மாவட்டம் திரு.சுப்பிரமணியம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆயுதப்படை ஊர் காவல் படை இணை அதிகாரி ஆகியோர்கள் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. தேர்வில் ஆண் உயரம் 167 சென்டி மீட்டர், பெண்கள் உயரம் 157 சென்டிமீட்டர், உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் 340 நபர்கள் கலந்து கொண்டதில் ஆத்தூரில் ஆண்கள் 37 நபரும் சங்ககிரியில் 16 ஆண் 3 பெண் 19 மற்றும் மேட்டூரில் இரண்டு பெண்கள் மொத்தம் 58 நபர்கள் தேர்வு பெற்றுள்ளனர் இதில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர் தேர்வு பெற்றவர்களின் விவரம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்