காஞ்சிபுரம்: கூடுவாஞ்சேரி அருகே இடைத்தேர்தல் அறிவிக்கக் கோரி மனு கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில், மாடம்பாக்கம், குத்தனூர், வள்ளலார் நகர், தாய் மூகாம்பிகை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பதவிவகித்து வந்த ஸ்கெட்ச் வெங்கடேசனை கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகள் வீசி வெட்டி படுகொலை செய்துவிட்டனர் இதனையடுத்து காலியாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவியை துணை தலைவராக பதவி வகித்து வந்த தீபக்ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டு தற்போது ஊராட்சி மன்ற தலைவராக (பொருப்பு) பதவி வகித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாடம்பாக்கம் ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி வலியுறுத்தியும் ஸ்கெட்ச் வெங்கடேசனின் ஊராட்சி மன்ற தலைவர்மனைவி கவிதா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுத்தார்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மாடம்பாக்கம் ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி மனு கொடுத்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் ஸ்கெட்ச் வெங்கடேசனின் ஊராட்சி மன்ற தலைவர் மனைவி. கவிதா புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு செய்தியாளர்களை சந்திக்க போவதாக தகவல் வெளியானது. இது குறித்து தகவல் அறிந்ததும் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படாத வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மணிமங்கலம் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்கெட்ச் வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய மனைவி கவிதா நிருபர்களிடம் கூறுகையில், எனது கணவர் வெங்கடேசன் சமூக சேவை செய்து மக்கள் மத்தியில் நாளடைவில் செல்வாக்கு பெற்று சுயேச்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்றார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரை நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை செய்துவிட்டனர்.
இதனை அடுத்து மாடம்பாக்கம் ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடத்த வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பொதுமக்களை திரட்டி சென்று மனு கொடுத்து இருந்தேன். அன்றிலிருந்து எனக்கும், எனக்கு ஆதரவாக இருக்கும் பொது மக்களுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. இது குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறினேன். மேலும் மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கும்போது ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த பிரிவில் பொது பிரிவில் உள்ள துணை தலைவராக பதிவு வகித்து வந்த தீபக்ராஜிக்கு எப்படி பொறுப்பு ஊராட்சி மன்ற தலைவர் பதவி வழங்கினார்கள். யார் வழங்கியது? ஊராட்சி மன்றத்தில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 3 பேர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு வழங்காமல் இவருக்கு வழங்க வேண்டிய என்னவென்று கேள்வி எழுப்பினார். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவேன் என்றார். இதனால் மாடம்பாக்கம் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 17ஆம் தேதி ஸ்கெட்ச் வெங்கடேசனுக்கு இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. குறிப்பிடத்தக்கதாகும்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்