செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அனைத்து வார்டு ஒன்றிய கவுன்சிலர்களும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர் .தைத்திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பூட்டப்பட்டு அதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் அலுவலக வளாகத்துக்குள் பயணம் செய்தனர். இந்நிகழ்ச்சிஅனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. அனைவரும் சமத்துவ பொங்கல்விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். அனைவருக்கும் சுவையான இனிப்பு பொங்கலும் சுண்டலும் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்