திருவள்ளூர் : கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இதில் கலந்துகொண்டவர்களுக்கு பிரியாணி விருந்தும் அமர்க்களமாக நடந்தது. இதுபற்றி கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்ததும், அவர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் திரு. ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது பிரியாணி விருந்து தடல்புடலாக நடந்துகொண்டிருந்தது.
இதையடுத்து, திருமணத்துக்கு வந்தவர்கள் மற்றும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். மேலும், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதாக திருமண மண்டப உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்