கோவை: உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றி திரிபவர்களை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி பெரியநாயக்கன்பாளையம். பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுபாளையம், ஆகிய உட்கோட்டங்களை உள்ளடக்கிய கோவை, புறநகர் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி
தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த 92 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் இந்த சோதனை நடந்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்