திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும், மாவட்டத்தில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS.,அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தற்போது கொரோனா வைரஸ் 2வது கட்டமாக தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
தேவைகள் இன்றி வெளியே சுற்றும் வாகன ஓட்டுநர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் முககவசம் அணிந்து பணி செய்ய வேண்டுமெனவும், காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கியும், பழங்கள் வழங்கியும் கவனமாக பணியாற்றும்படி அறிவுரை கூறினார்.