ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரொன தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி உறுதி செய்யும் விதமாகவும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. சிவகுமார் IPS அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகத் துறையினருக்கும் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு தொகுப்பை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
இராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் -ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
அரக்கோணம்