சேலம் : சேலத்தில் கோகுல்ராஜ் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரை தொடர்பு கொண்ட ஒரு நபர் இரண்டு சைக்கிள்கள் வேண்டும் என்று மொபைல் போன் மூலம் ஆர்டர் செய்தார். மனுதாரர் கோகுல்ராஜ் இரண்டு சைக்கிள்களுக்கும் சேர்த்து 19998/- என்று கூறியுள்ளார். அதற்கு மேற்படி நபர் google pay பணம் செலுத்துவதாக கூறி கூகுள் பேயிலிருந்து மேற்படி தொகைக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக பணம் கேட்டு ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். அதை கவனிக்காத மனுதாரர் அதை அக்சப்ட் செய்தவுடன் மேற்படி தொகை அந்த நபரின் கணக்கிற்கு சென்று விட்டது. இது புது மாதிரியான ஏமாற்று வேலை கூகுள் பேயிலிருந்து பணம் அனுப்புவதாக கூறினால் அதை கவனத்துடன் கையாள வேண்டும். எதிர் தரப்பினர் பணம் அனுப்பினால் ஆட்டோமேட்டிக்காக நம் கணக்கிற்கு பணம் வந்துவிடும். ரிக்வெஸ்ட் என்று அவர்கள் அனுப்பும் போது அதை நாம் ஏற்று ஏதேனும் பட்டனை அழுத்தினால் பணம் நம் கணக்கில் இருந்து எதிர் தரப்பினர் கணக்கிற்கு மாறிவிடும்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்