தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த 28.01.2022 அன்று முதல் 04.02.2022 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, பெருங்குளம் பகுதிகளில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் சம்பந்தமாக போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (03.02.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ்சிங் இ.கா.ப, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.செந்தில், ஆறுமுகநேரி குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கஸ்தூரி, ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மேரிஜெமிதா, உதவி ஆய்வாளர் திரு.ராஜாமணி உட்பட காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.