தூத்துக்குடி: வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 19.02.2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 18 டவுன் பஞ்சாயத்துகளில் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் சுவரொட்டிகள், டிஜிட்டல் பேனர்கள் ஆகியவைகள் ஒட்டப்படுவதையும், மற்றும் சுவரோவியங்கள் வரைதல் போன்றவற்றை கண்காணித்தல், பிரச்சினை ஏற்படக்கூடிய வாக்குசாவடிகள் உள்ள பகுதிகளை கண்காணித்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருக்கும் குடோன்களை கண்காணித்தல், சட்டவிரோதமாக கஞ்சா போன்ற போதை பொருள்கள் விற்பனையை கட்டுபடுத்துதல் போன்ற தேர்தல் நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (31.01.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கோபி, சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு.கணேஷ், ஸ்ரீவைகுண்டம் திரு.வெங்கடேசன், மணியாச்சி திரு.சங்கர், கோவில்பட்டி திரு.உதயசூரியன், விளாத்திகுளம் திரு.பிரகாஷ், சாத்தான்குளம் திரு.ராஜு, மாவட்ட குற்ற ஆவண கூடம் திரு.பிரேமானந்தன், மதுவிலக்கு பிரிவு திரு.பாலாஜி, பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருமதி.ஷாமளா தேவி, திரு.கணேஷ்குமார், திருமதி.பவித்ரா மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து பலர் கொண்டனர்.