கோவை : கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று முன் பொறுப்பேற்றார் நேற்று இவர் கோவை மாநகரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் உள்ள இடங்களையும், பார்வையிட்டார் பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கும் சென்றார் பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உளவு துறை (நூண்ணறிவு பிரிவு) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது. உளவுத்துறையினர் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இருக்க கூடாது நேர்மையாக நடுநிலையுடன் செயல்புரிய வேண்டும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வது தெரிய வந்தால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் ஏதாவது ஒரு இடங்களில் பிரச்சனைகள் நடக்க இருந்தால் அதை கண்டறிந்து முன்கூட்டியே தெரியபடுத்த வேண்டும் இதுதான் உளவு துறையினரின் கடமை இவ்வாறு அவர் பேசினார் கோவை மாநகர காவல் 4பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன ஒவ்வொரு பிரிவிலும் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் சப்- இன்ஸ்பெக்டர்கள் . காவலர்கள் என பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்