தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள (திருநறையூர்) நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் 108-திவ்யதேசங்களில் 20 -வது திவ்யதேசமாகவும்,40- சோழநாட்டு திருப்பதிகளில் 14-வது திருப்பதியாகவும்,முக்தி தரும் 12-வைணவ தலங்களில் 1-வதுதிருத்தலமாகவும் பெரும் புகழுடன் விளங்கி வருகிறது
வேறு எங்கும் காண முடியாத உலக புகழ்பெற்ற கல்கருட பகவான் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில்
நடைபெற்று வரும் மார்கழி உற்சவத்தில் (21-12-2020 ) நான்காம் நாள் திருவிழாவில் ஸ்ரீகல்கருட சேவை நடைபெற்றது .
இதில் கோவிட்-19 நிலையான வழிகாட்டு நடைமுறைகள்படி வீதி புறப்பாடு இன்றி திருக் கோயிலூக்குள் உத்ஸவம் நடைபெற்றது
இவிழாவின் பாதுகாப்பு பணிகளை திருவிடைமருதூர் காவல் துறை துணைகண்காணிப்பாளர் திரு.அசோகன் தலைமையில் திருவிடைமருதூர் ,நாச்சியார்கோவில் , பந்தநல்லூர்,திருப்பனந்தாள் ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்கள் , மற்றும் உதவி ஆய்வாளர்கள் , போலீசார்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள் .
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்