தேனி: தேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த திரு. ஜி. சிவசங்கர பாண்டியன் அவர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி வருகிறார். இவர், (07.09.2025) அன்று தேனி மாவட்டம், கூடலூர் N.S.K. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாதனை முயற்சியில் கலந்து கொண்டு, ஒவ்வொரு காலிலும் 500 கிராம் மணல் பையை இணைத்து, ஒரு நிமிடத்தில் 192 ஜாகர் ஸ்கிப்ஸ் செய்து உலக சாதனையை நிகழ்த்தினார்.
இந்த அபார சாதனையை நிகழ்த்தியதற்காக, திரு. ஜி. சிவசங்கர பாண்டியன் அவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டி, வாழ்த்துகளையும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கி ஊக்கமளித்தார். இந்த சாதனை, காவல் துறையினரின் உடல் திறன், மன உறுதி மற்றும் ஒழுக்கத்தை உலக அளவில் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
















