சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. உலக ஒருங்கிணைந்த மதநல்லிணக்க குழு நிறுவனத் தலைவர் ரபீக் ராஜா சார்பாக, புதுவயல் அப்பல்லோ மெடிக்கல் எதிர்ப்புறம் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீரை தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, சாக்கோட்டை காவல் ஆய்வாளர், நகர அமைப்பாளர் சேக்தாவுத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி