மதுரை : மனிதநேயம் மகத்தானது. ஆனால் தற்காலத்தில் அதற்கும் பஞ்சம் நிலவி வருகின்றது. வீடு, மனைவி, மக்கள் என்பது போக, தற்போது அனைவரும் வீடு, மனைவியுடன் நின்று விடுகின்றனர். ஆனால் முதலில் மக்கள், வீடு, மனைவி என்று வாழ்பவர்கள் தான் காவல் துறையினர். அவர்கள் செய்யும் அநேக நற்காரியங்கள், ஊடகங்களில் பெரிதுபடுத்தி காண்பிப்பதில்லை.
மதுரை மாவட்டம் மேலூரில், காவலர் புண்ணிய காரியம் செய்துள்ளார். இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்து இருக்கின்றார். மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதியில், மேலூர் காவல்நிலையம் கு.எண் 2139 u/s 174crpc, இந்த வழக்கின் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில். அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உறவினர்கள் யாரும் இறந்த நபரை தேடி வராத காரணத்தால் மேலூர் காவல் நிலைய காவலர் திரு.சிவா அவர்கள் தானாக முன்வந்து அவ்வுடலை நல்ல முறையில் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. காவலர் சிவாவின் செயல் உண்மையில் பாராட்டுதலுக்கு உரியது.

திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.