கோவை: கோவை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் திரு.பேச்சிமுத்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு 2003 பேர்ச் காவலர்கள் சார்பாக 1,68,000/- மற்றும் கோயம்புத்தூர் மாநகர ஆயுதப்படை காவல் அலுவலகர்கள் சார்பாக 1,64,250/- ஒட்டுமொத்தமாக 3,32,250/- உதவி தொகை ஆயுதப்படை துணை ஆணையர் திரு.முரளிதரன், உதவி ஆணையர் திரு.சித்தராசு, ஆய்வாளர் திரு.பிரதாப் சிங், தலைமை காவலர்கள் திரு.ராமசந்திரன், திரு.சண்முகம், மற்றும் திரு.மணிகண்டன் ஆகியோர் மறைந்த காவலர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அர்பணிப்புடன் செயல்பட்டுஇ உயிரிழக்கும் காவலர்களின் குடுபத்திற்குஇ சக காவலர்களின் உதவி கரம்இ உயிர் நீத்த காவலரின் ஆன்மாவிற்கு இளைப்பாறுதல் தரும் என்பதில் ஐயமில்லை.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்