சென்னை: பூந்தமல்லியிலிருந்து திருவெற்றியூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பச்சையப்பன் கல்லூரி அருகே வந்த போது பேருந்தின் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் சாதுரியமாக பேருந்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டார்.
நிலை தடுமாறிய பேருந்தை கண்ட ரோந்து பணி காவல்துறையினர் அருகில் சென்று பார்த்த போது பேருந்து ஓட்டுநர் மயக்க நிலையில் இருந்தார்.
கோல்டன் ஹவர்ஸ் என்கிற உயிர்காக்கும் நேரத்தை, உதவி ஆய்வாளர் திரு.யாஹியா சரியாக பயன்படுத்தி ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிர் பிழைக்க செய்தார்.
தக்க சமயத்தில் உதவி புரிந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.யாகியா மற்றும் காவலர் திரு.கார்த்திகேயன் ஆகியோரை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது.
