பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று கர்ப்பபை அறுவைச் சிகிச்சை செய்ய பெண் ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் யாரும் குருதி தானம் செய்ய முன்வராத நிலையில் இந்த தகவலை அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்-1004 திரு.அழகுதுரை அவர்கள் மேற்படி மருத்துவமனைக்கு சென்று குருதி தானம் வழங்கினார்.குருதி தானம் வழங்கிய காவலர் அழகுதுரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பாராட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை