திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் தாழையூத்து காவல் நிலைய வழக்கு சம்பந்தமாக ஆஜரான குற்றவாளியை வழிக்காவல் செய்தபோது அந்நபரை, கையில் அரிவாளுடன் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் வெட்ட முயன்ற நபரை துப்பாக்கியுடன் விரைந்து சென்று பிடித்து அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுத்து, உயிரை காப்பாற்றிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவலர் வேணுகோபால் என்பவரை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி முனைவர் செ.சைலேந்திர பாபு, IPS., அவர்கள் பாராட்டினார்கள்.