நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் திரு. ஆரோக்கியராஜ் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி மேற் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நாய் ஒன்று அடிபட்டு உயிருக்குப் போராடி வந்தது. இந்நிலையில் உடனடியாக அந்த நாயை மீட்டு அதற்கு உரிய சிகிச்சை அளித்து நாய்கள் காப்பகத்திற்கு கொண்டு சேர்த்த காவல் ஆய்வாளரை அப்பகுதி மக்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.