திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி பால் டெப்போ அருகில் மன்னார்குடி, தென்வடல் காகிதப்பட்டரை தெருவை சேர்ந்த பார்த்திபன் மகன் ஜெயநாராயணன் (வயது-38). என்பவர் நண்பர்களோடு பேசி வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராறில் 1.மன்னார்குடி, அரிசிக்கடை சந்து பகுதியை சேர்ந்த ஜானகிராமன் மகன் நம்பிராஜன் (வயது-30). 2.நெடுவாக்கோட்டை, கீழத்தெருவை சேர்ந்த ஷாஜஹான் மகன் பீர் முகம்மது (வயது-34). ஆகியோர் தாக்கியதில் ஜெயநாராயணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அவ்வழக்கில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.