திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்துறைப்பூண்டி மெயின் ரோடு, அம்மன் லேத் பட்டறை சந்து வழியாக திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவை சேர்ந்த மோகன் மகன் அருள்பிரகாஷ் (வயது-40). அவரது வீட்டிற்கு செல்லும் போது நடைபாதை குறுகலாக இருப்பதாக கூறினார்.
அப்போது அங்கு லேத் பட்டறை வைத்திருக்கும் திருத்துறைப்பூண்டி பெரிய சிங்கலாந்தி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஸ்ரீதர் (வயது-20). என்பவர் தாக்கியதில் அருள்பிரகாஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.