தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பிள்ளைமுத்து அவர்கள் கடந்த 10.09.2020 அன்று மாரடைப்பாலும்,
முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. ராமச்சந்திரன் அவர்கள் கடந்த 31.05.2020 அன்று மாரடைப்பாலும்,
கயத்தாறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி தெய்வத்திரு. தங்கராஜ் அவர்கள் கடந்த 23.09.2020 அன்று உடல் நிலை சரியில்லாமலும்,
திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. கணபதி அவர்கள் கடந்த 02.09.2020 அன்று உடல் நிலை சரியில்லாமலும்,
தட்டப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் தெய்வத்திரு. நாராயணசாமி அவர்கள் கடந்த 31.12.2020 அன்று சிறுநீரக கோளாறு காரணமாகவும்,
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் திருமதி. முத்துலெட்சுமி அவர்கள் கடந்த 30.12.2020 அன்று மகப்பேறின்போதும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி உயிரிழந்த காவல்துறையினரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை இன்று (22.10.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார். அவர்கள் மேற்படி உயிரிழந்த உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பிள்ளைமுத்து அவர்களின் மனைவி மற்றும் வாரிசுதாரரான திருமதி. ராமலெட்சுமி என்பவரிடமும்,
சிறப்பபு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. ராமசந்திரன் அவர்களின் மனைவி மற்றும் வாரிசுதாரரான திருமதி. சாரதாதேவி என்பவரிடமும், சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. தங்கராஜ் அவர்களின் மனைவி மற்றும் வாரிசுதாரரான திருமதி. தங்கசெல்வி என்பவரிடமும்,
சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. கணபதி அவர்களின் மனைவி மற்றும் வாரிசுதாரரான திருமதி. வள்ளியம்மாள் என்பவரிடமும்,
தலைமை காவலர் தெய்வத்திரு. நாராயணசாமி அவர்களின் மனைவி மற்றும் வாரிசுதாரரான திருமதி. பார்வதி என்பவரிடமும்,
பெண் காவலர் தெய்வத்திருமதி. முத்துலெட்சுமி அவர்களின் கணவர் மற்றும் வாரிசுதாரரான திரு. ராமநாதன் என்பவரிடமும் வழங்கி அவர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின்போது காவல்துறை அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. சரஸ்வதி, மற்றும் உதவியாளர் திரு. ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.